ஜோகூர், கோத்தா திங்கியில் திடீர் வெள்ளம்; நீரில் மூழ்கிய முக்கிய சாலைகள் – 70 குடும்பங்கள் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோத்தா திங்கி:

கோத்தா திங்கியில் விடியற்காலையில் பெய்த பலத்த மழையால் இங்குள்ள மூன்று குடியிருப்பு பகுதிகளில் இன்று அதிகாலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது, இதன்காரணமாக சுமார் 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அங்குள்ள தற்காலிக தங்குமிடங்களுக்கு அனுப்பப்பட்டனர். அதேநேரம் அங்குள்ள முக்கிய சாலை வெள்ளத்தில் மூழ்கியது.

கம்போங் பாரு சுங்கை மாஸ், தாமான் தேசாரு உத்தாமா மற்றும் தாமான் பெனாவர் ஹார்மோனி ஆகிய இடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயரமான பகுதிக்கு மாற்றப்பட்டனர்.

ஜோகூர் மாநிலத்தில் தற்போது மழைக்காலம் என்பதால், இக்காலகட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம், இது பொதுவாக நவம்பர் முதல் மார்ச் வரை ஏற்படும். இந்த காலகட்டத்தில் அதிக மழைப்பொழிவு, பலத்த காற்று காரணமாக அவ்வப்போது வெள்ளம், குறிப்பாக கடலோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்.

இந்நிலையில், ஜோகூரில் காலை மற்றும் இரவு நேரங்களில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here