பாசிர் மாஸ் மருத்துவமனையின் ஹீமோடயாலிஸிஸ் பிரிவின் கூரை ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசிர் மாஸ் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு தலைவர், துணை மேலாளர்
முகமது அஸ்மி ஹுசின் ( Mohd Azmi Husin ) இன்று வெளியிட்ட அறிக்கையில், நேற்று இரவு 11.47 மணிக்கு அழைப்புப் பெற்றதாகவும், உடனடியாக எட்டு அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
“தீயணைப்பு குழுவினர் பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொண்டு, சம்பவ இடத்தில் தீ விபத்து, வெடிப்பு அல்லது நிலச்சரிவு ஏற்படும் எந்த அபாயமும் இல்லை என்பதை உறுதி செய்தனர். இந்த விபத்தின் காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.