உஸ்பெகிஸ்தான் அதிபர் வருகை; நன்றி சொன்னார் பிரதமர்

கோலாலம்பூர்:

லேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு கோலாலம்பூர் வந்து சேர்ந்திருக்கும் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காட் மிர்ஸியோவிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்றி தெரிவித்தார்.

 அவரின் இந்த வருகையானது மலேசியா – உஸ்பெகிஸ்தான் இடையிலான பரஸ்பர உறவுகள், ஒத்துழைப்புகள் மேலும் வலுப்பெறும் என்று தம்முடைய ஃபேஸ்புக் பதிவில் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார். உஸ்பெகிஸ்தான் அதிபர் நம்முடைய அதிகாரப்பூர்வ விருந்தினராக வந்திருக்கிறார்.

அவரை வரவேற்று இந்த அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தேன் என்று நேற்று வெளியிடப்பட்ட அந்தப் பதிவில் பிரதமர் கூறினார். பிரதமரின் அழைப்பை ஏற்று உஸ்பெகிஸ்தான் அதிபர் செவ்வாய்க்கிழமை மலேசியா வந்தடைந்தார். 2016 டிசம்பர் மாதம் அதிபராகப் பதிவியேற்ற அவர், மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாகும்.

கடந்த ஆண்டு மே மாதம் உஸ்பெகிஸ்தானுக்கு வருகை மேற்கொண்டிருந்த அன்வார், மலேசியாவுக்கு வருகை தரும்படி அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அன்வாரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு நேற்றுப் பிற்பகல் வருகை அளித்த உஸ்பெகிஸ்தான் அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.

அரச ரேஞ்சர் முதலாவது பட்டாளத்தின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷவ்காட்டும் பிரதமரும் தங்களது பேராளர் குழுவுடன் சந்திப்பில் பங்கேற்றனர். இதில் பரஸ்பர நலன் தொடர்பான வியூக விவகாரங்கள், முதலீடு, வாணிபம், செமிகண்டக்டர், சுற்றுலாத்துறை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டில் மலேசியா – உஸ்பெகிஸ்தான் இடையிலான வாணிபம் 13.2 விழுக்காடு சரிவு கண்டு 369.8 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. 2023இல் இரு நாடுகளுக்கு இடையிலான வாணிபம் 426.1 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. இதில் வாணிபம் மலேசியாவுக்குச் சாதகமாக இருந்தது. உஸ்பெகிஸ்தானுக்கு மலேசியா 360.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஏற்றுமதி செய்திருக்கிறது. 2024ஆம் ஆண்டில் மத்திய ஆசிய நாடுகளுக்கிடையில் மலேசியாவின் 2ஆவது மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக உஸ்பெகிஸ்தான் திகழ்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here