தன வசியம், பணம் வசியம் ஆவதற்கு தாந்த்ரீக பரிகாரங்கள் சில உண்டு. இவற்றை முறையாக வட இந்திய மக்கள் பலர் பின்பற்றி செல்வந்தராகவும் இருக்கிறார்கள். பண வசியம் உண்டாக பெண்கள் ஆன்மீக ரீதியாக சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் மகாலட்சுமி வாசம் நிரந்தரமாக இருக்க, பெண்கள் அந்த வீட்டில் மிகவும் மென்மையாகவும், ஆனந்தமாகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு பணம் மேலும் மேலும் வசியமாக செய்ய வேண்டியது என்ன?
பெண்களுக்கு பணம் வசியமாக செவ்வாய், வெள்ளி, சனி போன்ற கிழமைகளில் விளக்கேற்றி பூஜை செய்வது அவசியமாகிறது. துளசியோ, வில்வமோ தத்தம் குலதெய்வ வழிபாட்டிற்கு உரிய தீர்த்தத்தை தயார் செய்து கற்கண்டு படைத்து, கற்பூரம் ஏற்றி, நெய் தீபம் போட்டு வர வேண்டும். சனிக்கிழமையில் வீட்டை துடைக்க வேண்டும். அப்படி துடைக்கும் பொழுது கல் உப்பு, படிகாரம், எலுமிச்சை சாறு சிறிதளவு துடைக்கும் நீரில் சேர்த்து வீட்டை துடைக்க பீடை, தரித்திரம் அனைத்தும் ஒழிந்து போகும்.
வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் இருக்கும் துடைப்பம் மற்றும் செருப்புகளை சூரிய ஒளியில் படுமாறு வைக்க வேண்டும். துடைப்பத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அறுந்த செருப்புகளை வீட்டில் தெரியாமலும் குவித்து வைக்காதீர்கள், குப்பையில் போட்டு விடுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட செருப்புகளை பயன்படுத்துபவர்கள், எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சூரிய ஒளியில் அவ்வப்பொழுது அவற்றை வைத்து எடுக்க வேண்டும்.
பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளித்து சுத்தபத்தமாக பால் பாயாசம் தயார் செய்து, லட்சுமி தேவிக்கு படைத்து நெய் தீபம் ஏற்றி, வெள்ளி விளக்கில் பூஜை செய்து வருபவர்களுக்கு பண வசியம் உண்டாகும். ஒவ்வொரு வெள்ளியும் இப்படி செய்து வர தனம், தானியம் சேரும், வறுமை நீங்கும். குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் குறையும். கணவன் மனைவிக்குள் அன்னோன்யம் உருவாகும்.
பெண்களுக்கு பண வசியம் உண்டாக செவ்வாய்க் கிழமையில் இப்படி புகை போடுவது நல்ல பலன் தரும். சாம்பிராணி புகை போடும் பொழுது சாம்பிராணியுடன் சேர்த்து கொஞ்சம் பசுஞ்சாண வறட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதை துண்டுகளாக்கி சாம்பிராணியுடன் சேர்த்து போடுங்கள். பின் இதனுடன் ஒரு துண்டு கிராம்பு, நான்கு துவரம் பருப்புகள், கொஞ்சம் பச்சை கற்பூரம் நுணுக்கி சேர்க்க வேண்டும். பின் கடைசியாக ஒரு ஏலக்காயை தட்டி போட்டு தூபம் காண்பியுங்கள். இந்தப் புகையை வீடு முழுக்க காண்பிக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் எல்லா மூலை, முடுக்குகளிலும் காண்பியுங்கள். படுக்கைக்கு கீழே, கட்டிலுக்கு கீழே, சமையலறையில் குறிப்பாக காண்பிக்க வேண்டும். தூபம் வீடு முழுக்க பரவ தீய சக்திகள், துர்தேவதைகள் வீட்டை விட்டு வெளியேறும். இதனால் பெண்களுக்கு பண வசியம் உண்டாகும். தனம், தானியம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது என்பது நம்பிக்கை. இந்த மாதிரி நீங்களும் உங்கள் வீட்டில் சாம்பிராணி புகை போட்டு பாருங்கள், உங்களுடைய கைகளிலும் பண வசியம் உண்டாகும்.





















