குடும்ப முன்னேற்றத்திற்கு ஏற்ற வேண்டிய தீபம்

ஒவ்வொருவரும் நம்முடைய குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவே கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறோம். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்னும் பட்சத்தில் பணவரவு என்பது அதிகரிக்க வேண்டும். இந்த பணவரவை அருளக்கூடிய தெய்வமாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அந்த மாதம் முழுவதும் பணவரவு உண்டாகும்.
அப்படிப்பட்ட ஒரு சிறப்பான தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முன்னேற்றம் ஏற்பட தீபம் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாரின் அம்சமாக திகழக்கூடிய சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மகாலட்சுமியின் அருளை நம்மால் பெற முடியும்.
மேலும் மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்கு பௌர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமை போன்ற நாட்கள் உகந்த நாட்களாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட நாட்களில் ஏதாவது ஒரு நாளை மட்டும் தேர்வு செய்து மாதத்திற்கு ஒருமுறை மட்டும் நாம் இந்த வழிபாட்டை செய்ய அந்த வழிபாட்டின் பலனால் அந்த மாதம் முழுவதும் பணவரவு என்பது அதிகரிக்கும்.
இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை செய்யலாம். அதே போல் பௌர்ணமி தினத்திலும் செய்யலாம். இந்த மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மகாலட்சுமி படத்திற்கு முன்பாக சுத்தம் செய்யப்பட்ட ஒரு தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டுக்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
பிறகு அந்த தாம்பாள தட்டில் மருதாணி இலைகளை ஒரு கைப்பிடி அளவு போட்டு நன்றாக முழுமையாக பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் மூன்று ஏலக்காய், 3 கிராம்பையும் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதற்கு மேல் ஒரு கைப்பிடி அளவு சில்லறை காசுகளை போட்டு பரப்ப வேண்டும். இந்த சில்லறை காசுகளுக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தின் சுடரொளியில் மகாலட்சுமி தாயார் வீற்றிருப்பதாக ஐதீகம். மேலும் மகாலட்சுமி தாயாரை பார்த்தவாறு நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொண்டு மகாலட்சுமி தாயாருக்குரிய பாடலை படித்து வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும்.

தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும்.
தீபம் எரிந்து முடித்த பிறகு மறுநாள் அந்த தட்டில் இருக்கக்கூடிய மருதாணி இலை ஏலக்காய் கிராம்பையும்  நன்றாக காய வைத்து பொடி செய்து சாம்பிராணி உடன் கலந்து வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். ஒரு சிறிய மண் உண்டியலை வாங்கி அதில் இந்த காசுகளை போட்டு பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
இந்த வழிபாட்டை மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு நினைத்துக் கொண்டு யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு பணவரவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீருவதோடு குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here