சென்னை,இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். சீதா ராமம், ஹாய் நானா, லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘பேமிலி ஸ்டார்’. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் சோபிக்க தவறியது.
இதனையடுத்து மிருணாள் தாகூர் படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக உள்ளநிலையில், திரையில் தோன்றாதது பற்றி மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
‘ரசிகர்கள் எனது கதாபாத்திரத்தை விரும்புகிறார்கள். அதனால், நான் கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறேன். முழுவதுமாக ஒரு படத்தில் கவனம் செலுத்தாமல் பல படங்களில் கையெலுத்திடுபவள் நான் அல்ல. நீண்ட காலம் மக்கள் மனதில் நிற்கும் ஐகானிக் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்’ என்றார்.