கூலிம்:
மூத்த குடிமக்களுக்கான தேசிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி திட்டம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்க உள்ளது.
தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகளை பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் MySejahtera மூலம் தடுப்பூசிக்கு விண்ணபிக்கலாம் என்று, துணை சுகாதார அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.
“இந்த இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி திட்டம், பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கையை சுகாதார இயக்குநர் ஜெனரல் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
“இந்த தடுப்பூசி 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் போடப்படும் ,” என்று அவர் இன்று வெல்னஸ் ஹப் கூலிம் மற்றும் வடக்கு மண்டல மருத்துவ பதிவு மையத்திற்கான சாவிகளை வழங்கும் விழாவை நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் சுமார் 170,000 பெறுநர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.