ஐதராபாத்,தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின் மக்கள் என்னை ஒரு குற்றவாளியைப்போல பார்ப்பதாக நாக சைதன்யா கூறி இருக்கிரார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
‘நான் சமந்தாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை நூறு முறை யோசித்துதான் எடுத்தேன். அது நடந்து தற்போது பல வருடங்கள் ஆகியும் நான் இன்னும் ஒரு குற்றவாளியைப் போலவே நடத்தப்படுகிறேன். இது என்னை மிகவும் புண்படுத்துகிறது. நான் மட்டுமில்லாமல் சோபிதாவும் இந்த டிரோல்களுக்கு ஆளாகிறார்’ என்றார்.