கோலாலம்பூர்:
சபா மற்றும் சரவாக்கில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்ந்து குறைந்துவருகிறது, நேற்றிரவு 8 மணி நிலவரப்படி அங்குள்ள தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் (PPS) தங்கவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,109 ஆகக் குறைந்துள்ளது, இந்த எண்ணிக்கை நேற்று மாலை 1,775 பேராக இருந்தது .
சபாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 326 குடும்பங்களைச் சேர்ந்த 1,040 பேரிலிருந்து 159 குடும்பங்களைச் சேர்ந்த 505 பேராகக் குறைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) செயலகம் அறிவித்துள்ளது.
அதேநேரம் சரவாக்கில், நேற்று மாலை 735 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இரவு 8 மணி நிலவரப்படி 604 ஆகக் குறைந்துள்ளது என்று, சரவாக் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.





























