தாமதமாக வீடு திரும்பிய கணவரிடம் கேள்வியெழுப்பியதற்காக மனைவியைத் தாக்கிய ஆடவர் கைது

மூவார்:

டந்த புதன்கிழமை பாரிட் ஜாவாவில் தாமதமாக வீட்டிற்குத் திரும்பியது குறித்து விசாரித்தபோது ஆத்திரமடைந்த ஒரு நபர் தனது மனைவியைத் தாக்கி, காயங்களை ஏற்படுத்தியது தொடர்பில், குறித்த ஆடவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இரவு 11.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், வேலையில்லாத நபர் தாமதமாக வீடு திரும்பியதாகவும், அது குறித்து அவரின் 32 வயதான மனைவி, அவர் ஏன் தாமதமாக வீட்டிற்கு வந்தார் என்று கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த சந்தேக நபர், திடீரென தனது மனைவியை நோக்கி கத்தினார், பின்னர் அவர் மனைவியின் முதுகில் உதைத்தும் வலது கையில் குத்தியும் காயத்தை ஏற்படுத்தினார் என மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது காயங்களுக்கு சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையில் (HPSF) சிகிச்சை பெற்றார்.

மேலும் ரைஸ் முக்லிஸ் கூறுகையில், கிடைத்த தகவலின் அடிப்படையில், வியாழன் அன்று அதிகாலை 2 மணியளவில் 34 வயதான உள்ளூர் ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

சந்தேக நபர் கடந்த காலங்களில் தனது மனைவியை பல தடவைகள் தாக்கியுள்ளதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் (AKRT) 1994 இன் பிரிவு 18A இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here