ஜோகூரில் மரம் விழுந்ததில் இரண்டு கடைகள் மற்றும் 15 வாகனங்கள் சேதம்

ஜோகூர் பாரு:

தாமான் பெலாங்கியில் இன்று பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்றைத் தொடர்ந்து, மரம் வேரோடு சாய்ந்ததில் ஜாலான் கூனிங் 1ல் உள்ள இரண்டு கடைகள் மற்றும் 15 வாகனங்கள் சேதமடைந்தன.

இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) மாலை 5.04 மணிக்கு, குறித்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு அழைப்பு வந்தது என்று, லார்கின் தீயணைப்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி ஃபிர்தௌஸ் அப்துல்லா தெரிவித்தார்.

உடனடியாக 10 தீயணைப்பு வீரர்களை ஒரு தீயணைப்பு மீட்பு டெண்டர் மற்றும் ஒரு அவசர மருத்துவ மீட்பு சேவையுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும், அங்கு வந்த தீயணைப்பு குழு, ​​​​ஒரு மரம் விழுந்து இரண்டு கடைகள் மற்றும் 15 வாகனங்கள் சேதமடைந்ததாக,” கூறினார்.

தீயணைப்புக் குழுவினர் விழுந்த மரத்தை வெட்டும் பணியில் ஈடுபடுகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here