ரானாவ்:
கடந்த பிப்ரவரி 3 அன்று, கம்போங் பாஸ், கயோ நாகஸ் பொனுலாகன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த ஆடவர் ஒருவர் நேற்று இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மொக்தார் அஸ்ரின் அமாட் (30), காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலை உச்சியில், நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டார் என்று, ரானாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தலைவர் ரித்வான் முகமட் தைப் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், பிப்ரவரி 6 ஆம் தேதி பாதிக்கப்பட்டவரின் தந்தை அவரைத் தொடர்பு கொண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி திரும்பி வருவார் என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
“இருப்பினும், பிப்ரவரி 10 ஆம் தேதி வரை, பாதிக்கப்பட்டவர் வீடு திரும்பவில்லை, இதனால் அவரது குடும்பத்தினர் அவரை மீன்பிடிக்கும் இடத்திற்குத் தேடி வந்தனர். இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் மட்டுமே அந்த இடத்தில் காணப்பட்டது என்றும், பின்னர் நேற்று மாலை அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்” என்றும் அவர் கூறினார்.




















