தடைகள் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட பரிகாரம்

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் என்பது இருக்கும். அந்த வகையில் சனிக்கிழமை என்பது சனிபகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடு சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காப்பாற்றும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை என்பது பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் உரிய கிழமை என்பதால் அன்றைய தினத்தில் நாம் இவர்களை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அந்த வகையில் காரிய தடையை நீக்கி முன்னேற்றத்தை தரக்கூடிய சனிக்கிழமை பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முன்னேற்றம் ஏற்பட பரிகாரம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி ஏற்படவில்லை என்பவர்களும், வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பவர்களும், கொடுத்த பணம் திரும்ப கிடைக்கவில்லை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புபவர்களும் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்தை பார்ப்பதற்கும் செய்ய வேண்டிய ஒரு வெற்றிலை பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பொதுவாகவே சனிக்கிழமை அன்று அரசமரத்தை நாம் வழிபாடு செய்யும் பொழுது மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அருளை நம்மால் பெற முடியும் என்றும் அன்றைய தினத்தில் அரசமரத்தில் இருவரும் வீற்றிருக்கிறார்கள் என்றும் பலவிதமான புராணங்களில் கூறப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த பரிகாரத்தை நாம் அரச மரத்தடியில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு கிழியாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய மூன்று வெற்றிலைகள் வேண்டும்.
இந்த ஒவ்வொரு வெற்றிலையையும் சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெற்றிலையின் உள்புறத்தில் கடுகு எண்ணெயை தடவ வேண்டும். பிறகு எட்டு மொட்டு உடையாத கிராம்பை வைத்து அதை நன்றாக சுருட்டி நீல நிற துணியால் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படி மூன்று வெற்றிலைகளை தயார் செய்து கொள்ளுங்கள். பக்கத்தில் அரசமரம் இருக்கக்கூடிய இடத்திற்கு இதை எடுத்துக் கொண்டு சென்று அரச மரத்தடியில் வைத்துவிட்டு ஒரு அகல் விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றி நீல நிற திரி போட்டு தீபமேற்றி அரச மரத்தை எட்டு முறை வலம் வர வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக எட்டு வாரங்கள் நாம் வழிபாடு செய்தோம் என்றால் யார் நமக்கு பணம் தராமல் நம்மை ஏமாற்றினார்களோ அவர்களிடம் இருந்து பணம் திரும்ப வருவதோடு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு காரியங்களிலும் நமக்கு வெற்றிகள் உண்டாகும். அதன் மூலம் பணவரவும் ஏற்படும். இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்குள் செய்துவிட வேண்டும்.
எளிமையான இந்த பரிகாரத்தை முழுமனதோடு தொடர்ச்சியாக சனிக்கிழமை தோறும் செய்பவர்களுக்கு எட்டு வாரங்கள் நிறைவடைவதற்குள்ளாகவே நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here