நாட்டில் மலாய் மொழி ஓரங்கட்டப்பட்டுள்ளது, அரசு விவகாரங்களில் கூட அந்நிய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது- பாஸ் தலைவர்

கோலாலம்பூர்:

லேசியாவில் மலாய் மொழி குறைவாகப் பயன்பாட்டில் உள்ளது என்று டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் (PN-மராங்) வருத்தம் தெரிவித்தார்.

குறிப்பாக அரசு மற்றும் உத்தியோகபூர்வ விஷயங்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் கூட மலாய் மொழி இன்னும் ஓரங்கட்டப்பட்டே உள்ளது, அரசு விவகாரங்களில் கூட அந்நிய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

“இன்று என்ன நடக்கிறது என்று பாருங்கள் – நகரம் மற்றும் தலைநகரில் உள்ள கடைகள் எல்லா வகையான மொழிகளையும் பயன்படுத்துகின்றன, சில சமயங்களில் மலாய் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகம் இல்லை என்றாலும், ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றார்.

“அநேக நிகழ்வுகளில், மூன்றில் ஒருபகுதி வெளிநாட்டினர் மட்டுமே உள்ளனர், ஆனால் எஞ்சியவர்கள் (மலேசியர்கள்), மலாய் மொழி பேசுபவர்கள், ஆனால் அவ்வாறான இடங்களில்கூட இன்னும் ஆங்கில மொழியை பயன்படுத்துவதையே அவர் கல் விரும்புகின்றனர். மேலும் அதிகாரப்பூர்வ கடிதங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் கூட இன்னும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here