கிள்ளான்:
2025 சிலாங்கூர் வருகை ஆண்டை முன்னிட்டு GM KLANG Wholesale City தன்னுடைய ஆகக் கடைசியான பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது. ‘Ke Mana Kita Lepas Borong’ எனும் சிலாங்கூரின் சுற்றுலா தளங்களை தேடி அடையாளம் காண்பதோடு திரில்லிங் ஷாப்பிங் செய்யும் வாய்ப்புகளும் வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கின்றன. அளவில்லா வெகுமதிகளையும் வாடிக்கையாளர்கள் அள்ளிச் செல்லலாம்.
சிலாங்கூர் மாநில ஊராட்சி, சுற்றுலாத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சுவீ லிம் 2024, நவம்பர் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இதற்கு அரச மாநகர் மன்றம் (MBDK), டூரிசம் சிலாங்கூர் (Tourism Selangor) ஆகிய துறைகள் ஆதரவு நல்கி இருக்கின்றன.
இதில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் இரண்டு புகைப்படங்களை ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு புகைப்படம் GM KLANG பேரங்காடியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மற்றொன்று சிலாங்கூரில் மனம் கவர்ந்த சுற்றுலா தளம். அதன் பின்னர் GM KLANG அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் Tag செய்ய வேண்டும்.
புகைப்படங்களில் கவரும் விளக்கம் தரப்பட்டிருக்க வேண்டும். அதில் #KeManaKitaLepasBorong, #TahunMelawatSelangor2025 என்ற hashtags கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். 2025 ஜனவரி முதல் ஜுன் வரை ஒவ்வொரு மாதமும் 500 ரிங்கிட் ஷாப்பிங் வவுச்சரை வென்றிடும் வாய்ப்பைப் பெறுவர்.
ஷாப்பிங் மட்டும் அன்றி அதற்கு அப்பாலும் எங்கள் நோக்கம் விரிவடைகிறது என்று GM KLANG பிராண்ட் தொடர்பு சீனியர் நிர்வாகி நோர்சுஹைடா பிந்தி ஓஸ்மான் கூறினார்.
இது அனைவருக்குமான போட்டி. அடிக்கடி வருகைத் தரும் வாடிக்கையாளர்களாக இருந்தாலும் முதல் தடவையாக வந்திருந்தாலும் போட்டியில் பங்கேற்கலாம். சுற்றுலாவை விளம்பரப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும். வெற்றியாளர்கள் சிலாங்கூரின் உன்னத அழகைக் காட்டிய மறக்க முடியாத அனுபவத்தை இதயங்களில் சுமந்து செல்வர் என்றார் அவர்.
2025 சிலாங்கூர் வருகை ஆண்டுக்கு தன்னுடைய ஆதரவாக GM KLANG பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
மேலதிக தகவல்களுக்கு GM KLANG அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களை வலம் வாருங்கள். ஷாப்பிங் செய்யுங்கள்…வெகுமதிகளை அள்ளிச் செல்லுங்கள். அடுத்த அதிர்ஷ்டசாலி நீங்களாக கூட இருக்கலாம்.