சிவராத்திரி தீப வழிபாடு

சிவபெருமானுக்குரிய முக்கியமான விரத நாட்களில் ஒன்றாக திகழ்வது மகாசிவராத்திரி. இது மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி. இந்த சிவராத்திரி நாள் அன்று பலரும் சிவாலயத்திற்கு சென்று கண்விழித்து  சிவபெருமானை நான்கு கால பூஜைகளில் வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுடைய கர்ம வினைகள் நீங்குவதோடு அவர்கள் கேட்கும் வரத்தையும் வாரி வழங்குவார் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவராத்திரியை வரவேற்கும் விதமாக வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் முறை: 

 

சிவராத்திரி தீப வழிபாடு மகா சிவராத்திரி அன்று பலரும் சிவாலயத்திற்கு சென்று பலவிதமான வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் முன் வைப்பார்கள். இப்படி மகா சிவராத்திரி அன்று செய்வதை விட சிவராத்திரி வருவதற்கு முன்பாகவே சில வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்றினோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய சிவராத்திரி விரதத்தின் முழு பலனையும் நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான தீபத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

 

இந்த தீபத்தை பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஆரம்பித்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மகா சிவராத்திரிக்கு மறுநாள் வரை எறிய விட வேண்டும். இப்படி நாம் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் அடிமுடி காணாத ஜோதியாக திகழக்கூடிய சிவபெருமானின் அருளை நம்மால் பெற முடியும். பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு ஒரு அகல்விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

 

இந்த தீபம் தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் எரிய வேண்டும். அதாவது இரவு 9 மணி வரை எரிய வேண்டும். பிறகு இதைக் குளிர வைத்துவிடலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிவபெருமானின் அம்சமாக திகழக்கூடிய விபூதியை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் சந்தன தூளை பரப்பி அந்த சந்தனத் தூளின் மேல் இந்த அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக பிப்ரவரி 22ஆம் தேதி, 23ஆம் தேதி, 24ஆம் தேதி, 25ஆம் தேதி ஏற்றி விடுங்கள். 26 ஆம் தேதி மகா சிவராத்திரி அல்லவா? அன்று மாலை 6 மணிக்கு ஏற்றக்கூடிய இந்த தீபமானது மறுநாள் அதாவது பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி வரை எரிய வேண்டும்.

 

ஏழு மணிக்கு மேல் தீபத்தை குளிர வைத்துவிட்டு அகல் விளக்கை சுத்தம் செய்து எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அகல் விளக்கிற்கு கீழே விபூதியையும் சந்தனத்தையும் நம்முடைய நெற்றியில் தினமும் வைத்துக் கொள்ள வேண்டும். சிவபெருமானே அந்த தீபத்தில் குடியிருப்பதாக கருதி நாம் செய்யக்கூடிய இந்த வழிபாட்டின் பலனால் விபூதியில் சிவபெருமானின் அம்சம் என்பது சேர்ந்திருக்கும். அதை நாம் நெற்றியில் தினமும் வைத்துக் கொள்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும். மேலும் நாம் முழு பக்தியோடு சிவபெருமானை நினைத்து தீபமேற்றி வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சிவபெருமானின் அருளால் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.
சிவபெருமானின் பரிபூரண அருளை பெறுவதற்கு உதவக்கூடிய சிவராத்திரியை முன்னிட்டு வீட்டில் இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய சிவபெருமானின் பரிபூரணமான அருளை நம்மால் பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here