10 மாதங்களாக மூடிக்கிடக்கும் ராமேஸ்வரம் தீர்த்தம்

ராமேஸ்வரம் :
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 10 மாதமாக மூடி கிடக்கும் தீர்த்த கிணறுகளைத்  திறப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்காமல் உள்ளதால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வால் ஆன்மிக தலம், சுற்றுலா தளம், கடற்கரை திறந்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம், திறந்த பரப்பு அருவியில் குளிக்கவும், சுற்றுலா பயணிகளை அனுமதித்த நிலையில், தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள் திறக்காமல், கடந்த 10 மாதமாக மூடியே கிடக்கின்றன.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வருகை 60 சதவீதம் குறைந்ததால், கோயிலை சுற்றியுள்ள லாட்ஜ்கள், ஓட்டல்களில் 80 சதவீதம் வியாபாரம் குறைந்தது.
மேலும் தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியாளர்கள், கடந்த 10 மாதமாக வருவாய் இன்றி தவிக்கின்றனர். அரசு உறுதி இத்தீர்த்தத்தை திறக்க கோரி ஜன.,12 இல் யாத்திரை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டமும், அனைத்து கட்சியினர் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.
ஆனால் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ‘ஜன.,18க்குள் தீர்த்தங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்ததும், போராட்டம் வாபஸ் ஆனது.  குமுறல் கலெக்டர் உறுதியளித்த நாள் முடிந்த நிலையில், கோயிலில் தீர்த்தம் திறக்க அறிகுறி எதுவும் இல்லாததால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here