இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவு குறித்து, ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா எம் சி எம் சி எனப்படும் மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையத்திடம் புகார் செய்துள்ளது.
மேலும் சம்பந்தப்பட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க போலீஸ் புகார் செய்திருப்பதாக, ஜாக்கிம் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சிராஜுடின் சுஹாய்மி Datuk Dr Sirajuddin Suhaimee கூறினார். அப்பதிவு, இஸ்லாத்தை அவமதிப்பதோடு, சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகிறது என்று அவர் சொன்னார்.
ஜாக்கிம் அதனைக் கடுமையாகக் கருதுவதால், அவ்விஷயத்தில் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இந்துக்களின் சமய நம்பிக்கையை கேலி செய்யும் சர்ச்சைக்குரிய வீடியோவைப் பகிவேற்றிய எரா எஃஎம் வானொலியின் 3 அறிவிப்பாளர்களின் செயலை ஜாக்கிம் சாடிய மறுநாள், இச்சம்பவம் நடந்துள்ளது.









