சிலாங்கூர், ஜோகூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

நாட்டின் ஆறு மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) பிற்பகல் 2.15 மணிக்கு மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்டுள்ள அறிக்கையில், பேராக், பகாங், சிலாங்கூர், ஜோகூர், சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அது தெரிவித்தது.

இந்த எச்சரிக்கை இன்று மாலை 6 மணி வரை நீடிக்கும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது. அதே நேரம் வடகிழக்கு பருவமழை மார்ச் 2025 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here