சிலாங்கூர், பேராக், ஜோகூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த மழை பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (மார்ச் 6) காலை 9 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் பேராக், சிலாங்கூர், நெககிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேராக் (ஹிலிர் பேராக்), சிலாங்கூர் (சபக் பெர்னாம், கோல சிலாங்கூர், கிளாங், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் செபாங், நெகிரி செம்பிலான் (சிரம்பான், போர்ட்டிக்சன், ரெம்பாவ், தம்பின்), மலாக்கா, ஜோகூர் (தங்காக், செகமாட், பஹாட், பஹாட், மூவார் திங்கி, ஜோகூர் பாரு), சபாவில் சண்டகன் (பெலூரன்), குடாட் (பிடாஸ் மற்றும் குடாட்) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறடது.









