வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

இன்று காலை 6.00 மணியளவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பயணிகள் காயமடைந்ததாக தீயணைப்பு, மீட்பு இலாகா பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் காயமடைந்த ஆறு பயணிகளும் சிகிச்சைக்காக சிரம்பான் துவாங்கு ஜாபார் மருத்திவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ரெம்பாவ் (Rembau), செனவாங் (Senawang), தம்பின் (Tampin), சிரம்பான் 2 (Seremban 2), சிரம்பான் (Seremban) ஆகிய நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு, மீட்பு அதிகாரிகளும் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here