ஜோகூரிலுள்ள ஒரு வீட்டில் தீ சம்பவம்; சீனப்பிரஜை உயிரிழப்பு

ஜோகூர் பாரு:

நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 16) இரவு, தாமான் டயா, ஜாலான் பெர்த்தாம் 15 இல் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சீன ஆண் ஒருவர் உயிரிழந்தார், அதே நேரத்தில் உள்ளூர் நபர் ஒருவர் தீக்காயங்களுக்கு ஆளானார்.

சம்பவம் தொடர்பில் இரவு 10.54 மணிக்கு தகவல் கிடைத்ததும், 19 பணியாளர்களைக் கொண்ட இரண்டு தீயணைப்பு மீட்பு டெண்டர் (FRT) பிரிவுகள் மற்றும் இரண்டு அவசர மருத்துவ மீட்பு சேவைகள் (EMRS) பிரிவுகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று, தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) மூத்த செயல்பாட்டுத் தளபதி உதவி தீயணைப்பு அதிகாரி முகமட் சியாஹிர் இக்வான் முகமட் கூறினார்.

தீ விபத்தில் சிக்கிய வீடு ஒன்று 80 விழுக்காடு வரை தீயில் அழிந்தது என்றும், மரணமடைந்த ஆடவரின் உடல் மேலதிகநடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

அதிகாலை 1.30 மணிக்கு தீ அணைக்கும் நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

சீனா நாட்டு ஆடவர் மரணமடைந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை செய்து வருவதாக தெற்கு ஜொகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைவர் ஏ.சிபி ரவுப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here