கம்போங் பாருவில் தீ சம்பவம்; மூன்று வீடுகள் எரிந்து நாசம்

கோலாலம்பூர்:

ம்போங் பாருவில் உள்ள பின்டாசான் ராஜா மூடா மூசா 4 இல் இன்று காலை ஏற்பட்ட தீ சம்பவத்தில் மூன்று வீடுகள் எரிந்து நாசமாகின.

இருப்பினும், சம்பவத்தின் போது அவ்விடுகளில் வசித்துவந்த 12 குடியிருப்பாளர்களும் தப்பித்து வெளியே ஓடினர் என்று, கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி மூத்த தீயணைப்புத் தலைவர் (PKPgB) முகமட் ரிடுவான் அக்யார் கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் காலை 9.39 மணிக்கு கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்திற்கு (PGO) அவசர அழைப்பு வந்தது என்று அவர் சொன்னார்.

“காலை 9.50 மணிக்கு தீயணைப்புப் படையினர் அங்கு வந்தபோது, 40 x 70 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டறிந்தனர். இதில் இரண்டு குடியிருப்புகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் முற்றிலுமாக எரிந்தன, மூன்றாவது வீடு 40 சதவீதம் எரிந்து நாசமானது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காலை 10.13 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தடயவியல் பிரிவு தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு குறித்து இன்னும் விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here