மடானி தொழிலாளர் அட்டையை கொண்டிருக்கும் ஒரு மில்லியன் தொழிலாளர்களுக்கு 30% வரை தள்ளுபடிகள்

மடானி தொழிலாளர் அட்டையை கொண்டிருக்கும் ஒரு மில்லியன் தொழிலாளர்களுக்கு 30% வரை தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை தள்ளுபடியுடன் ஒரு மில்லியன் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் மடானி தொழிலாளர் அட்டையை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.

ஏயோன் (Aeon), மைடின் (Mydin), ஜேக்கல் (Jakel), மேரிபிரவுன் (Marrybrown), ஜென்டிங் (Genting), ஓல்ட் டவுன், ஷூஸ் காஃபி (Old Town White Coffee),  சோக்கர் (Socar), பேட்டரிகு (Bateriku) ஆகியவை இந்த தள்ளுபடிகள் வழங்கும் நிறுவனங்கள் ஆகும் என புக்கிட் ஜாலில் அக்ஸியட்டா அரங்கில்  நடைபெற்ற 2025 தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் பிரதமர் இதனை அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here