கோல திரெங்கானு:
இலஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஏழு நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு விதிக்கப்பட்டது.
போதைப்பொருள் நடவடிக்கைகள், சூதாட்டம் போன்றவற்றை கண்டுக்கொள்ளாமல் இருக்க அவர்கள் இந்த இலஞ்சத்தைப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இருவரில் ஒரு போலீஸ் அதிகாரி 3,000 ரிங்கிட் லஞ்சமும் மற்றயவர் 2,000 ரிங்கிட் லஞ்சமும் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக திரெங்கானு மாநில MACC அலுவலகத்தில் விளக்கம் அளிக்க சென்ற போது, அவர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதை
திரெங்கானு மாநில உழல்தடுப்பு ஆணைய இயக்குநர் ஹஸ்ருல் ஷஸ்ரீன் அப்துல் யசீட் உறுதிப்படுத்தினார்.