PKR கட்சியின் வருடாந்திர மாநாடு மே 21-24 தேதிகளுக்கு மாற்றம்

கோலாலம்பூர்:

PKR கட்சியின் இளைஞர் (AMK) மற்றும் PKR மகளிர் மாநாடுகளை உள்ளடக்கிய 2024/2025 ஆண்டிற்கான வருடாந்திர மாநாடு மே 21 முதல் 24 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஃபெளசியா சாலே தெரிவித்தார்.

ஆசியான் மாநாட்டினை முன்னிட்டு, பல நாட்டுத் தலைவர்கள் மலேசியாவிற்கு வருகை தருவதால், கட்சியின் தலைவர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதிகாரப்பூர்வ அரசுப் பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதால், PKR கட்சியின் தேதிகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக அவர் நேற்று செவ்வாய்கிழமை (மே 6) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.

மேலும் PKR இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிகளின் மாநாட்டு தொடக்க விழா மே 21 புதன்கிழமை நடைபெறும், மேலும் இரு பிரிவுகளுக்கும் முறையான மாநாடு மறுநாள் வியாழக்கிழமை (மே 22) நடைபெறும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PKR மத்திய தலைமைக்கான தேர்தல்கள் மற்றும் வருடாந்திர மாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெறும் என்றும், 2024/2025 ஆண்டுக்கான PKR வருடாந்திர மாநாடு சனிக்கிழமை (மே 24) நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here