ஆபரேஷன் சிந்தூர்; பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு பெண்களை வைத்தே பதிலடி கொடுத்த இந்தியா

எங்கள் பெண்களின் துயரக் கண்ணீருக்கு, இதுதான் பதில் என பெண்களை வைத்தே பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. எனவேதான் அந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய பாரம்பரியத்தில் திருமணமான பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’ என அழைக்கப்படும். அண்மையில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலில் பல பெண்களின் கண் எதிரில் அவர்களின் கணவன்மார் சுட்டுக்கொல்லப்பட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர். இதில் திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்கு சென்ற இந்திய கடற்படை அதிகாரி ஒருவரும் அதில் அடங்குவார்.

இந்த துயர சம்பவங்களுக்கெதிராக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த அதிரடி தாக்குதலை மேற்கொள்ள கர்னல் சோபியா மற்றும் விங் கமாண்டர் வியோமிகா எனும் 2 சிங்கப்பெண்களை இந்தியா களமிறக்கி தீவிரவாதிகளின் பல முகாம்களை சில நிமிடங்களில் அளித்தொழி ள்ளது. இந்த வீர செயலை புரிந்த பெண்களுக்கு இப்போது உலகெங்குமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here