உணவு சாப்பிட்ட பின்னர் உடனே தண்ணீர் குடிப்பவரா? அதனால் என்ன ஆகும் தெரியுமா?

சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்துவது, சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது. இந்த விஷயங்களில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் நாள்தோறும் இருந்த வண்ணம் உள்ளது.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர்

சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. சிலர், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர். அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

சாப்பாட்டிற்கு இடையே தண்ணீர்

உணவருந்தும் போது தாகம் அல்லது விக்கல் எடுத்தாலோ குறைந்த அளவிலான தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உணவருந்தும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் என்சைம் செயல்திறன் குறைத்து, உடலில் வேண்டாத நச்சுக்கள் அதிகமாக உருவாகும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஆயுர்வேத முறைப்படி உணவருந்தும்போது, குறைந்த நீரை உறிஞ்சிக் குடித்தால் செரிமான மண்டலத்துக்கு நல்லது என கூறப்பட்டுள்ளது.

சாப்பாட்டிற்கு  பின் தண்ணீர்

ஆயுர்வேத முறையில் உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் உட்கொள்வதால், சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. உணவருந்திய பிறகு 30 நிமிட இடைவேளைக்கு பின் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

உணவு சாப்பிட்ட 1 – 2 மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம். உணவருந்தும் போது சோடா பானம், காபி போன்றவற்றை பருக வேண்டாம். இது உடல்நலத்திற்கு நல்லதல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here