PLUS நெடுஞ்சாலையில் பல வாகனங்களை உட்படுத்திய விபத்தில் ஒருவர் மரணம்; நால்வர் காயம்

ஈப்போ:

சிலிம் ரிவரில் நிகழ்ந்த 4 வாகனங்கள் உட்படுத்திய கோர விபத்தில் டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.

நேற்றிரவு சிலிம் ரிவர் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு – தெற்கு விரைவுச்சாலையின் 366 ஆவது கிலோமீட்டரில் மூன்று லோரிகள், ஒரு MPV வாகனம் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகின என்று, பேரா தீயணைப்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் டிரெய்லர் லோரி ஓட்டுநர் மரணமடைந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

இரவு 10.36க்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சிலிம் ரிவர், பிடோர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து பணியாளர்கள் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்தபோது டிரெய்லர் லோரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிக்கிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

குழாய்களை ஏற்றிச் சென்ற லோரியின் ஓட்டுநர், பயணி ஆகிய இருவரும் 28 வயதுடையவர்கள். மேலும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற ஐந்து டன் லாரியின் ஓட்டுநரான 28 வயதுடையவர் காலில் காயம் அடைந்ததாகவும் அவர் கூறினார்.

MPVயில் பயணித்த 37 மற்றும் 32 வயதுடைய இருவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here