சபா மாநில முன்னாள் ஆளுநர் அஹ்மத்ஷா அப்துல்லா காலமானார் ; மாநிலக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்

கோத்தா கினாபாலு:

சபா மாநில முன்னாள் ஆளுநர் அஹ்மத்ஷா அப்துல்லா உடல்நலக்குறைவால் தனது 79 வயதில் காலமானார்.

இவர் 2003 முதல் 2010ஆம் ஆண்டு வரை ஒன்பதாவது சபா மாநில ஆளுநராக அஹ்மத் ஷா பொறுப்பு வகித்து வந்தார்.

நேற்றிரவு 8.45 மணிக்கு அஹ்மத் ஷா காலமானார் என்று சபா மாநில அரசாங்க செயலாளர் சஃபார் உந்தோங் கூறினார்.

இவரின் மறைவையொட்டி சபா மாநில கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், சபா மாநிலத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here