கேரளாவில் இந்தாண்டு 2,450 பேருக்கு டிங்கி காய்ச்சல் உறுதி; 15 பேர் மரணம்

திருவனந்தபுரம்:

ந்தியாவின் கேரள மாநிலத்தில் இவ்வாண்டில் மட்டும் இதுவரை 15 பேர் டிங்கிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,450 பேருக்கு டிங்கித் தொற்று ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் டிங்கி தொற்ற அதிக வாய்ப்புள்ள மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை மதிப்பிட்டுள்ளது. அதிகரித்துவரும் வெப்பநிலை, டிங்கித் தொற்றை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கோடை மழையைத் தொடர்ந்து கேரளாவில் பரவிவரும் டிங்கிக் காய்ச்சல் கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. பெரும்பாலோருக்கு இலேசான அறிகுறிகளே இருந்தாலும், மீண்டும் டிங்கி தொற்றும்போது உடல்நிலை மிகவும் மோசமாகலாம்.

சென்ற ஆண்டு அங்கு 20,568 பேருக்கு டெங்கித் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் 53,688 பேரை டிங்கி தொற்றியிருக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டது. இலேசான அறிகுறிகளே தோன்றுவதால் டிங்கி பாதிப்பு பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here