ஜோகூரில் அரசு வீடமைப்புத் திட்டத்தில் மோசடி; இரு பெண் அதிகாரிகள் கைது!

ஜோகூர்:
ஜோகூரியன்களுக்கானப் புதிய வீடமைப்புத் திட்டமான Perumahan Rumah Impian Bangsa Johor (RIBJ) திட்டத்தின் மூலமாக இரு வெவ்வேறு நபர்களை ஏமாற்றி, பணம் வசூல் செய்ததாக இரு பெண் அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தங்கள் மீதான குற்றத்தை மறுத்து மேலதிக விசார்ணைக் கோரி, ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று ஜோகூர் அமர்வு நீதிமன்றம் சம்மந்தப்பட்ட இரு பெண்களும் தலா RM 8,000 ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

கடந்த 2021 பிப்ரவரிலில் 48 வயது ஆடவரையும், அதே ஆண்டு 42 வயது மற்றொரு பெண்ணுக்கும் புதிய வீடமைப்புத் திட்டத்தின் மூலமாக வீடுகள் பெற்று தருவதாக கூறி, நம்பிக்கை மோசடி செய்து சுமார் RM 24,000 வரையில் பணத்தை லஞ்சமாகப் பெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்மந்தப்பட்ட பெண்கள் இருவரின் மீதுமான விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் மேலதிக நீதிமன்ற விசாரணை ஜூன் 25 மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here