2021 ஆம் ஆண்டிற்கான உலக புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றது பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்டிருந்த கொரில்லாவின் புகைப்படம்

மத்திய ஆப்பிரிக்காவில் பிரிட்டனை சேர்ந்த அனுப் ஷா என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்டிருந்த கொரில்லாவின் பிரமிக்க வைக்கும் புகைப்படம் ‘The Nature Conservancy- 2021’ன் உலக புகைப்பட போட்டியில் உயர்ந்த விருதினை வென்றுள்ளது.

கொரோனா நெருக்கடி தாமதங்களுக்கு பிறகு The Nature Conservancy அமைப்பு நடத்திய உலகளாவிய புகைப்பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பானது 72 நாடுகளில் இயங்கும் அனைத்துலக இயற்கை பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு ஆண்டுதோறும்  புகைப்பட போட்டியை நடத்தும். இதில் 158 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான புகைப்படங்கள் இடம் பிடித்து வந்தன.

இதில் உயர்ந்த விருதினை வென்ற இந்த புகைப்படமானது மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள பாங்கா ஹோகோ, ஜங்கா-சங்கா எனும் அடர்ந்த வனப்பகுதியில் எடுக்கப்பட்டது. வெற்றிபெற்ற இந்த புகைப்படக் கலைஞருக்கு 4000 டொலர் மதிப்புள்ள கேமரா தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here