ஜிசிசி-சீனா உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக ஒத்துழைப்பை அதிகரிக்க அன்வாரும் சீனப் பிரதமர் லியும் ஒப்புக்கொண்டனர்

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சீனப் பிரதமர் லி கியாங் ஆகியோர் இன்று  நடைபெறவிருக்கும் ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (ஜிசிசி)-சீனா உச்சநிலை மாநாட்டின் மூலம் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். உண்மையில், 2025ஆம் ஆண்டு ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு தலைமையேற்றிருக்கும் மலேசியா, வரும் ஆண்டுகளில் வட்டார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சீனாவின் வலுவான உறுதிப்பாட்டை உண்மையிலேயே பாராட்டுவதாக அன்வார் கூறினார்.

ஆசியான் உச்சி மாநாடு 2025 இன் ஒரு பகுதியாக, நான் சீனாவின் பிரதமர் லி கியாங்கை சந்தித்தேன். கோலாலம்பூரில் நடந்த ஆசியான்-ஜிசிசி-சீனா உச்சிமாநாட்டின் மூலம் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தோம். பொருளாதாரம், ஹலால் தொழில், வர்த்தகம், போக்குவரத்து (குறிப்பாக கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு), பசுமை ஆற்றல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய துறைகளில் நாங்கள் கவனம் செலுத்தினோம் என்று அன்வார் எக்ஸ் ஒரு பதிவில் கூறினார்.

உலகளாவிய தெற்கின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மலேசியாவின் நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கு சீனா அளித்த ஆதரவிற்கும் நன்றி தெரிவித்ததாக பிரதமர் கூறினார். இந்த ஒத்துழைப்பு மலேசியா, சீனா, ஆசியானுக்கு பயனளிக்கும் என்பதோடு வட்டாரப் பொருளாதார வளர்ச்சியை வளர்க்கும் என்று அவர் கூறினார்.

2ஆவது ஆசியான்-ஜிசிசி உச்சநிலை மாநாட்டுடன், கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ள தொடக்க ஆசியான்-ஜிசிசி-சீனா உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள லி இன்று முன்னதாக இங்கு வந்தார். வட்டராங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூலோபாய தளங்களாக இந்த உச்சநிலை மாநாடுகள் செயல்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here