யாலா :
தாய்லாந்து நாட்டின் யாலா, பெத்தோங்கில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நேற்று திங்கட்கிழமை மலேசியர் ஒருவர் இறந்து கிடந்க்க கண்டெடுக்கப்பட்டார்.
நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 67 வயதான அந்த நபர் பெத்தோங்கில் விடுமுறையில் இருந்ததாக நம்பப்படுவதாக பெத்தோங் காவல்துறை புலனாய்வுத் தலைவர் மேஜர் கர்னல் போலீஸா ஜக்கரின் லக்சனா தெரிவித்தார்.
திங்கட்கிழமை காலை ஹோட்டல் ஊழியர்களால் அவரது அறையில் முகம் குப்புறக் கிடந்த நிலையில் அந்த நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
காலை 8:30 மணியளவில் ஹோட்டல் ஊழியர்களிடமிருந்து அழைப்பு வந்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
“நாங்கள் வந்தபோது, பாதிக்கப்பட்டவர் படுக்கைக்கு அருகில் முகம் குப்புறக் கிடப்பதைக் கண்டோம். “பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என்று தெரியவந்தது,” என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் மகன் மலேசியாவிற்கு உடலைக் கொண்டு வருவதற்கு முன்பு அதை அடையாளம் கண்டு உரிமை கோருவதற்காக பெட்டோங் மருத்துவமனைக்கு அதிகாலையில் வந்ததாக ஜக்கரின் கூறினார்.
இதற்கிடையில், சோங்க்லாவில் உள்ள மலேசிய தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, சடலத்தை மலேசியா கொண்டுவரும் செயல்முறையை எளிதாக்க உதவுவதாக உறுதிப்படுத்தியது.


















