கட்டில், சோபா, கண்ணாடி என கண்டதையும் சாப்பிடும் 3 வயது குழந்தை!

வீட்டில் உள்ள சோபா, சேர், கட்டில், மெத்தை, கண்ணாடி உள்ளிட்டவற்றை 3வயது குழந்தை சாப்பிடுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து தனது குழந்தையை காக்கும்படி தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேல்ஸின் பிளாக்வுட் நகரைச் சேர்ந்தவர் ஸ்டேஷி ஹெர்னுக்கு வின்டர் எனும் 3வயதில் பெண் குழந்தை உள்ளது. வீட்டில் விளையாடும்போது குழந்தை, தரையில் கிடந்த பொருட்களை எல்லாம் வாயில் போடுவதும், அதை சாப்பிட்டும் வந்துள்ளது.

வழக்கமாக குழந்தைகள் கீழே கிடக்கும் பொருட்களை வாயில் எடுத்து போடும் பழக்கம் உள்ளதால், தானாக சரியாகிவிடும் என்று விட்டு விட்டார். ஆனால், அந்த குழந்தை வழக்கத்துக்கு மாறாக, ஷோபாவில் உள்ள பஞ்சு, போட்டோ பிரேம், கண்ணாடி துண்டுக்கள், கட்டிலில் உள்ள மரக்கட்டைகள் என கிடைக்கும் அனைத்தையும் சாப்பிட துவங்கியதால், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஸ்டேஷி.

தூங்கும் நேரத்தை தவிர பிற நேரங்களில் குழந்தையை கண்காணிக்கும் அளவிற்கு தள்ளப்பட்டார். குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், எதைப் பார்த்தாலும் சாப்பிட வேண்டும் எனும் நோய் இருப்பதும், ஆட்டிசம் பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்டேஷி, இதில் இருந்து தன்னுடைய குழந்தையை எப்படியாவது மீட்டு கொண்டுவர வேண்டும் என்று போராடி வருகிறார்.

இதுகுறித்து பேசிய ஸ்டேஷி , “குழந்தையின் விநோத உணவு பழக்கத்தால், கண்காணிப்பது முழுநேர வேலையாக மாறிவிட்டது. சோபா, கண்ணாடி துண்டுகள், மரக்கட்டைகள், பொம்மைகள், மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றை சாப்பிடுகிறது. எந்நேரத்தில் எதை எடுத்து சாப்பிடும் என்ற பயத்தில் இருக்க வேண்டியுள்ளது. நடுஇரவில் எழுந்து போர்வை, மெத்தை உள்ளிட்டவற்றை சாப்பிடுகிறது.

இதில் இருந்து மீட்பதற்காகவும், எப்போதும் சாப்பிடும் உணர்வை தடுப்பதற்காகவும், பொருட்களை தொட்டு உணர்ந்து விளையாடும் விளையாட்டை குழந்தையுடன் ஆடி வருகிறேன். அப்போது மட்டும் இந்த பிரச்சினை குறைவாக இருக்கிறது. இந்த விநோத உணவு பழக்கத்தை தடுக்க மருத்துவர்கள் உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here