7 மலேசியக் கப்பல்கள் கட்டணமின்றி ஹார்முஸ் நீரிணையை கடக்க அனுமதி! ஈரானுடன் பிரதமர் பேச்சுவார்த்தை வெற்றி

ஷா ஆலம் | மார்ச் 31, 2026

ஹார்முஸ் நீரிணையில் சிக்கி இருக்கும் மலேசியாவிற்குச் சொந்தமான ஏழு கப்பல்கள், எவ்விதக் கூடுதல் கட்டணமும் (Toll-free) இன்றிப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (Anthony Loke) இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று ஷா ஆலமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி லோக், “மலேசியக் கப்பல்கள் இந்தக் கடற்பகுதியைக் கடக்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஈரான் அரசுடன் மலேசியா கொண்டுள்ள நெருக்கமான தூதரக உறவின் காரணமாக இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இது குறித்த தகவலைத் தேசியப் பொருளாதார நடவடிக்கை குழுவிடம் (NEAC) பகிர்ந்து கொண்டுள்ளார். ஈரானுக்கான மலேசியத் தூதரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here