மாரான்:
பெக்கான் அவா, கம்போங் பாயா பாசிர் அருகே உள்ள சுங்கை பகாங்கில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் 58 வயதுடைய ஒருவரின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
பிற்பகல் 1.30 மணியளவில் ஆற்றில் மிதக்கும் ஒரு உடலைக் கண்ட கிராமவாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்ததாக மாரான் காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் வோங் கிம் வாய் தெரிவித்தார்.
“முழுமையாக உடையணிந்த உடல் தண்ணீரில் முகம் குப்புற மிதந்து காணப்பட்டது என்றும், அது மணல் அகழும் சுரங்கப் பகுதிக்கு அருகில், 20 மீட்டர் ஆழத்திலும், ஆற்றங்கரையில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவிலும் கண்டெடுக்கப்பட்டது.
“ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சில குப்பைகள் மற்றும் மரக்கட்டைகள் மத்தியில் உடல் சிக்கிக் கொண்டிருந்தது என்றும், தீயணைப்பு வீரர்கள் சஅலத்தை மீட்க உதவினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
போலீசார் பாதிக்கப்பட்டவரின் பணப்பையையும் மைகாட்டையும் அவரது கால்சட்டையின் பாக்கெட்டில் கண்டுபிடித்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
























