புக்கிட் ஜலீலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 30வது மாடியிலிருந்து விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு

கோலாலம்பூர்:

புக்கிட் ஜலீலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 30வது மாடியிலுள்ள அவர்களது வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான்.

சம்பவம் குறித்து காலை 11.17 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக செராஸ் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் கேன்சலோர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் 37 வினாடி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here