ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தைக் கடத்திய மூவர் கைது

பானாஜி:

காவல்துறையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது, கோவாவில் பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சம் சிக்கியது.

ஏம்பர்கிரீஸ்’ எனக் குறப்பிடப்படும் திமிங்கலத்தின் எச்சமானது, மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தியா உட்பட பல நாடுகளில் சட்டவிரோதமாக இதைக் கடத்துவோருக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கோவாவில் உள்ள சங்வேம் கிராமம் அருகே, வெள்ளிக்கிழமையன்று காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதற்குள் 5.75 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, காரில் இருந்த மூன்று பேரும் கைதாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here