RTS இணைப்பு கட்டுமானத்திற்காக ஜோகூர் பாருவில் 18 மாத சாலை மூடல்

ஜோகூர் பாரு:

ஜாலான் ஜோகூர் பாரு-எண்டாவின் ஒரு முக்கியமான பகுதி ஜூன் 3 முதல் போக்குவரத்துக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதி

RTS இணைப்பு கட்டுமானத்தை எளிதாக்குவதற்காக 18 மாதங்களுக்கும் மேலாக அப்படியே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த முழுமையான சாலை மூடல் சாலையின் பிரிவு 0.10 முதல் பிரிவு 0.20 வரை இருக்கும் என்றும், அடுத்தாண்டு டிசம்பர் 31 வரை 24 மணி நேரமும் கட்டுமானப் பணிகள் அப்பகுதியில் நடைபெறும் என்றும் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.

இந்த RTS இணைப்பு, ஜோகூர் பாருவை சிங்கப்பூருடன் இணைக்கும் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here