கோலாலம்பூர்:
முகநூலில் வந்த முதலீட்டு நிறுவனம் தொடர்பான விளம்பரத்தை நம்பி 50,000 வெள்ளிக்கு மேல் தனது சேமிப்புப் பணத்தை பெண்மணி ஒருவர் இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 32 வயது பெண் இன்று காலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஶ்ரீஆலம் மாவட்டக் காவல்துறை தலைவர் ஆணையர் முஹமட் சொஹைமி ஈஷாக் தெரிவித்தார்.
குறித்த முதலீட்டு விளம்பரத்தில் 10 முதல் 35 விழுக்காடு லாபம் பெறலாம் என குறிப்பிட்டிருப்பதை நம்பி, கடந்த மே 30 ஆம் திகதி முதல் ஜுன் 3 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் அவர் 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 16 முறை மொத்தம் RM54,950 பணத்தைப் பரிவர்த்தனை செய்ததாக கூறினார்.
சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் உரிமைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
























