கோலாலம்பூர்:
காவல் துறைத் தலைவர் (IGP) டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன், வரும் ஜூன் 22 ஆம் தேதி பதவி விலகுவதாகக் கூறப்படுகிறது.
2023 முதல் -2025 வரையிலான ராயல் மலேசிய காவல்துறையின் தலைவராக இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகுகிறார்.
கடமைகளை ஒப்படைத்தல் மற்றும் பிரியாவிடை அணிவகுப்பு வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) கோலாலம்பூர் காவல் பயிற்சி மையத்தில் (புலாபோல்) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானிக்குப் பிறகு, ஜூன் 23, 2023 முதல், ரசாருதீன் இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 14 வது IGPயாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




















