நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் என்பதும் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்று பெயரிடப்பட்டிருப்பதும் தெரிந்த தகவல்தான்.
இதையடுத்து, கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் படத்துக்கு ‘ப்ரோகோட்’ (BroCode) என்று தலைப்பு வைத்துள்ளனர். இதைத் தயாரிக்கப்போவதும் ரவி மோகன்தானாம்.
இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது, எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்யலாம் என ரவிமோகனே பரிந்துரைத்தாராம். இத்தகவலைக் கேள்விப்பட்ட எஸ்.ஜே.சூர்யாவும் உடனே கால்ஷீட் ஒதுக்கிவிட்டதாகத் தகவல்.
இப்படத்தில் நகைச்சுவையும் வில்லத்தனமும் கலந்த கதாபாத்திரத்தில் அவர் அசத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.