மலாக்கா,
பணி ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் ஒரே இரவில் லட்சாதிபதி ஆனார் *திடீர் லட்சாதிபதி என்ற அடைமொழி, பஹாரி ஹருண் என்ற அந்த 60 வயது ஆசிரியருக்குச் சாலப் பொருந்தும். பேங்க் சிம்பானான் நேஷனல் வங்கியின் பிரிமியம் சேமிப்பு சான்றிதழின் வழி (BSN SSP) அவருக்கு இப்படி அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு பண மழையைக் கொட்டோ கொட்டோவென்று கொட்டியிருக்கிறது.
முன்னாள் ஆசிரியரும் மலாக்கா ஆயர் மோலேக் தேசிய இடைநிலைப்பள்ளியின் நிர்வாகப் பிரிவு முன்னாள் துணைத் தலைமையாசியராகவும் பணியாற்றிய பஹாரி கடந்த ஆண்டு தொடக்கத்தில் பணி ஓய்வு பெற்றார். லட்சாதிபதி என்ற அடைமொழி தன் பெயரோடு பிணைக்கப்படும் என்று கனவில்கூட தாம் கண்டதில்லை என்று அவர் விவரிக்கிறார்.
தம்மைப் பொறுத்தவரையில் 89 வயதான தம் தாயார் மஸ்னா முகமது நோரின் இடையறாத பிரார்த்தனைதான் தம்மை இன்று லட்சாதிபதியாக உயர்த்தியுள்ளது என்றும் அவர் கூறினார். அந்தப் பத்து லட்சம் ரிங்கிட் அதிஷ்டப் பரிசைத் தாமே வெல்ல வேண்டும். ” என்று இறைவனிடம் பிரார்த்திக்குமாறு தாம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

10 லட்சம் ரிங்கிட்டுக்கான மாதிரி காசோலையை பிஎஸ்என் தரப்பினரிடமிருந்து நேற்று பெற்றுக் கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் உவகைப் பொங்க தம்மைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார்.மலாக்கா மாநில பிஎஸ்என் வங்கியின் இயக்குநர் முகமட் ஹைருல் அபு பக்கார் அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.
சுங்கை புத்தாட் கிராமத்தைச் சேர்ந்த பஹாரி, கடந்த மே மாதம் 12ஆம் தேதி நடத்தப்பட்ட BSN SSP – 112 போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது தம் காதுகளையே நம்ப முடியாத ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனதாக குறிப்பிடுகிறார்.

தமது 17 வயது முதல் பிஎஸ்என் வங்கியில் பணம் சேர்க்கத் தொடங்கி இருக்கிறார் பஹாரி. பிஎம்டபிள்யூ காரை வாங்க வேண்டும் என்ற லட்சியத்திற்காக 10 ரிங்கிட்டாக இருந்தாலும் அதனைச் சேமிக்கப் 1 பழகிக் கொண்டார். அதனாலேயே பிஎஸ்என் பாளராக அவர் மாறிப் போனார்.
ஆனால் சேர்த்த பணத்தில் பிஎம் டபிள்யூ காரை வாங்க இயலாது போனாலும் 60 வயதில் லட்சாதிபதியாக தம்மை பிஎஸ்என் உயர்த்தி விட்டதை எண்ணி எண்ணி அவர் நெக்குருகுகிறார்கிளாந்தானில் கடந்த மாதம் நடைபெற்ற அந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் தாம் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை யென்றாலும் ஓயாமல் தமக்கு வந்த தொலைப்பேசி அழைப்புகளின் வழி தாம்தான் அந்த லட்சாதிபதி என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட தாக அவர் தெரிவித்தார்.
நாள்தோறும் விடியல்வேளையில் பள்ளிவாசலுக்குச் செல்லும் போதெல்லாம் அங்குள்ள உண்டியலில் கணிசமான தொகையைப் போட்டுவிட்டு அந்த அதிர்ஷ்டப் பரிவு தமக்கே கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்குப் பலன் கைமேல் கிடைத்துவிட்டது என்று அவர் பூரிக்கிறார்.தமக்கு கிடைத்த அந்தப் பணத்தில் தம் சகோதர சகோதரிகளை உம்ராவுக்கு அழைத்துச் செல்லும் அவாவையும் அவர் கொண்டிருக்கிறார்.
.










