News By M.Anbaa
சைபர் ஜெயா,
மித்ரா – இன்டெல்லேஸ் இணைய நெறிமுறை ஊடுருவல் நிபுணத்துப் பயிற்சி மாணவர்கள் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மே 30ஆம் தேதியன்று
சைபர்ஜெயாவில் மித்ரா – இன்டெல்லேஸ் சைபர் பாதுகாப்பு நிபுணத்துப் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர், மித்ரா செயல் நடவடிக்கைக் குழுத் தலைவர் க. பிரபாகரன் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் முயற்சியில் மித்ராவின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சியாக இன்டெல்லேஸ் நிறுவனத்தின் இணைய நெறிமுறை ஊடுருவல் நிபுணத்துப் பயிற்சிகளை மாணவர்கள் பயிற்சிகளைத் தொடர் கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் துறையின் கீழ் செயல்படும் மலேசிய இந்திய உருமாற்று பிரிவு மித்ரா மற்றும் இன்டெலிஜென்ஸ் டெக் சர்வீஸ் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்டத் திட்டத்தின் கீழ் இந்திய மாணவர்கள் தொழில்முறை சான்றிதழ்வுடன் சைபர் பாதுகாப்பு துறையில் தங்களை மேம்படுத்தும் அறிய வாய்ப்பாக இதுபோன்ற இலவச திட்டப் பயிற்சிகள் உறுவாக்கப்பட்டுவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் மத்தியில் சிறந்த எதிர்காலத்திற்கு பல வாய்ப்புகளையும் இணைய நெறிமுறை ஊடுருவல் நிபுணத்துப் பயிற்சியில் தொழில்நுட்ப திறன்களையும் அதிகரிக்க பெருமளவு துணைப் புரியும் என்றார் அவர். MITRA – சைபர் பாதுகாப்பு திட்டத்தில் இணைய நெறிமுறை ஊடுருவல் நிபுணத்துப் பயிற்சிக்கு பின்னர் எதிர்கால வேலைவாய்ப்பு திட்டத்தை ஏற்படுத்துகிறது என அவர் கூறினார்.
நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுந்த துரித வளர்ச்சியில் மதிப்பிடும் துறைகளில் ஒன்றாக இணைய நெறிமுறை ஊடுருவல் நிபுணத்துப்
பயிற்சிகள் தனித்துவமானது என்றும் சைபர் பாதுகாப்பு சிறப்பு சான்றிதழ் பயிற்சி மற்றும் பணியிட திட்டத்தின் ஒரு முக்கியமானதாக கருதப்படுகிறது என அவர் கூறினார்.
இன்டெல்லேஸ் நிறுவனத்தின் அனுபவமிக்க நிபுணர்களின் வழிகாட்டியுடன் பாடங்களை கற்று தரும் நடவடிக்கையுடன் இணையம் வழி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் தளத்திற்கு அப்பால் புதுப்புது வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர் என்று இன்டெல்லேஸ் (Intellize Tech Services) தலைமை நிபுணர் இன்டெல்லேஸ் தொழில்நுட்ப சேவைகள் திட்ட ஆலோசகர் டாக்டர் கவிதா மூர்த்தி கூறினார்.
இப்பயிற்சித் திட்டத்தில் மூன்று முக்கிய சான்றிதழ் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். ECSS (Ec-Council Certified Security Specialist) ஈசிஎஸ்எஸ் ஈசி கவுன்சிலிங் செர்டிஃபிகேட் செட்கூரிட்டி ஸ்பெஷலிஸ்ட், CND (Ec-Council Certified Network Defender) சிஎன்டிஇசி கவுன்சில் செர்டிஃபிகேட் நெட்வொர்க் டிஃபெண்டர், CEH (Ec-Council Certified Ethical Hacker) ஈசி கவுன்சில் செர்டிஃபிகேட் எட்டிக்கல் ஹேக்கர் ஆகிய திட்டத்தின் வழியாக மாணவர்கள் இ கவுன்சில் மூன்று முக்கிய சான்றிதழ் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. சைபர் பாதுகாப்பு சிறப்பு சான்றிதழ் பயிற்சி திட்டத்தில் (IT, Diploma) மாணவர்கள் விண்ணப்பிக்க மித்ராவை தொடர்பு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.









