கோலாலம்பூர்:
வங்சா மாஜுவில் உள்ள ரியானா கிரீன் ஈஸ்ட் காண்டோமினியத்தின் அடித்தளத்தில் இன்று ஒரு கார் திடீரென தீப்பிடித்ததில் 11 வெளிநாட்டு ஆண்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் காலை 9.45 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி நசாருதீன் ஹரோன் தெரிவித்தார்.
“அழைப்பைத் தொடர்ந்து, உடனடியாக வங்சா மாஜு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
நிசான் டீனா காரின் எஞ்சின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் கார் சுமார் 30 சதவீதம் சேதமடைந்ததாகவும், காண்டோமினியத்தின் அடித்தளம் புகையால் நிரம்பியிருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஆறு பேர் சிவில் பாதுகாப்புப் படை ஆம்புலன்ஸ் மூலமாகவும், இருவர் தீயணைப்பு துறையின் EMRS வாகனம் வழியாகவும், மீதமுள்ளவர்கள் HKL ஆம்புலன்ஸ்கள் வழியாகவும் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு (HKL) கொண்டு செல்லப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தீயணைப்பு துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.





















