கேலிச்சித்திர எரிப்பில் ஈடுபட்ட UMS மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்வதைத் தடுக்காதீர்கள் -பிரதமர்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களைப்போன்ற உருவமுடைய கேலிச்சித்திரத்தை எரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடர்வதற்கு, “உயர்கல்வி அமைச்சகம் (MOHE) மற்றும் சபா பல்கலைக்கழகம் (UMS) என்பன தடையாக இருக்கக்கூடாது” என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஏனினில் அந்த இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியம் என்று கூறிய பிரதமர், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை தொடர்ந்து தான் பாதுகாத்து வருவதாக  தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறினார்.

முன்னதாக, சபா கெம்பூர் ரசுவா 2.0 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மூவரும் தேசத்துரோகச் சட்டத்தின் கீழும், பிரதமரின் கேலிச்சித்திரத்தை எரித்ததற்காகவும் கைது செய்யப்பட்டதாக கோத்தா கினபாலு காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் காசிம் முடா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here