லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் நடிக்கும் சூரி

சென்னை,தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் கடந்த 16-ந் தேதி ‘மாமன்’ படம் வெளியானது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கத்தில் குடும்ப கதையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் சூரி நடிக்க உள்ளார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க உள்ளார். நடிகர் சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சூரியின் மற்றொரு புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தினை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்க உள்ளார். இவர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here