சட்டவிரோத பந்தயத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலி, இருவர் காயம்

ஷா ஆலம்:

நேற்று புதன்கிழமை (ஜூன் 25) இரவு , தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையின் (SKVE) KM51.1 இல், பூலாவ் கேரி நோக்கிச் செலும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

15 முதல் 25 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் பூ லாவ் இந்தாவின் லகுனா பூங்கா திசையில் இருந்து அதிவேகமாக தங்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றதாக நம்பப்படுகிறது என்று, தெற்கு கிளாங் OCPD உதவி ஆணையர் ராம்லி காசா கூறினார்.

“இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றையொன்று நேருக்கு நேர் மோதியதால், அதன் ஓட்டுநர்கள் கீழே விழுந்தனர், பின்னர் மற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பின்னால் இருந்து மோதின.

“15 மற்றும் 25 வயதுடைய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது, மேலும் 24 மற்றும் 15 வயதுடைய இரண்டு பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அவர் வியாழக்கிழமை (ஜூன் 26) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது கைருல் நிஜாம் அப்துல் தாலிப்பை 03-33722222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் ஏசிபி ராம்லி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here